Saturday, April 10, 2010

குறுந்தொகை காட்சிகள்

188. முல்லை முகை முற்றின
====================================
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் )
பாடல்:முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
===========================================================
கார்கால முல்லை மலர்கள் மலர்ந்தன!
கார்குழலாள் என்றன் உடலின் அணிகலன்கள்
யாவும் கலன்றுவிழச் செய்தவரோ நாடித்தான்
ஆவலுடன் இங்கே வரவில்லை! மாலையும்
தாவிக் குதித்தேதான் வந்ததடி தோழியே!
நேரிழைநான் எப்படித் தாங்கிப் பொறுத்திருப்பேன்?
பாவிநான் வாழ்வதெவ் வாறு?

0 Comments:

Post a Comment

<< Home