Saturday, April 10, 2010

குறுந்தொகை காட்சிகள்

=======================================
191. தொடாதே என்போம்
பாடியவர் .............
பாடல்:உதுக்காண் அதுவே;இதுஎன் மொழிகோ?
====================================================
தோழி! பறவைகளோ தத்தம் துணைகளுடன்
கூவிக் களிக்கிறதே கூடித்தான்! அப்படிக்
கூவி அகவுகின்ற ஓசை, பிரிவினிலே
ஆவி பறிகொடுத்து வாழ்கின்ற நம்மைத்தான்
பாவிஎன்று சொல்லி வருத்தும்! நம்தலைவர்
ஆவலுடன் இங்கே வரும்பொழுது நானிங்கே
கோவமுடன் கூந்தலுக்குப் பூக்களைச் சூட்டித்தான்
நாவலரே! பேரழகு செய்யவேண்டாம்!வாடிநிற்கும்
காவலற்ற தேகத்தை நீங்கள் தொடவேண்டாம்!
ஈரமின்றி சொல்லிடுவேன்! புள்ளினங்கள் ஓசைகள்
நேரடியாய்க் கேட்பதைக் கேள்.

0 Comments:

Post a Comment

<< Home