Monday, October 17, 2016

ன முதல் னௌ வரை


மனம்போன போக்கிலே வாழ்ந்திடுவோ  மென்றால்
மனசாட்சி குத்தும் உணர்.
னா
இன்னாச்சொல் புண்படுத்தி வாடவைக்கும் !இன்சொற்கள்
ஒன்றே மதிப்புயர்த்தும் பார்.
னி
தனிமனித நல்லொழுக்கம் சீர்குலைந்து போனால்
மனிதன் நிலைகுலைவான் சொல்.
னீ
கானீனன் என்றசொல் கர்ணனாம்! வள்ளன்மை
வான்மழையைத் தோற்கடிக்கும் கூறு.
னு
மனுநீதிச் சோழனின் நீதி முறைக்கோ
இணையுண்டோ இவ்வுலகில்? சொல்.
னூ
நானூறு பாக்கள் அகவாழ்வைக்  காட்டுதம்மா!
நானூறோ கூறும்  புறம்.
னெ
என்னென்பேன் ஊடகத்தின் வன்முறை ஆபாசம்!
அம்மம்மா கண்டனம் செய்
னே
நானே அனைத்தும் எனச்சொன்னால் ஆணவம்!
நாமே எனச்சொல்  பணிவு.
னை
பானைக்குள் யானைபோல் கையளவு உள்ளத்தில்
யானைபோல் பேராசை பார்.

னொ
தானொன்றை மாதவி எண்ணி கவிபாட
கோவலன் நீங்கினான் சென்று.
னௌ
னௌவு என்றால் தெலுங்கில் சிரிப்பென்பார்!
னௌவே மனிதர்க் கழகு.

0 Comments:

Post a Comment

<< Home