இனியவை நாற்பது நிறைவு
பாடல் 40
பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.
-----------------------------------------------------------------------------------------
பத்துப் பொருள்கொடுத் தேனும் உறவூரில்
பற்றுடன் வாழ்தல் இனிதே! விதைநெல்லை
சுற்றி விதைத்துண்ண உள்ளதை உண்ணாமல்
பற்றைத் தவிர்த்தல் இனிதாகும்! நாள்தோறும்
கற்றுத் தெளிய பயன்தரும் நூல்களைக்
கற்பதுபோல் நற்செயல் ஏந்தும் இனிமைக்குச்
சற்றும் நிகரில்லை வேறு.
0 Comments:
Post a Comment
<< Home