Thursday, November 14, 2019

வள்ளுவம் நிம்மதியைத் தரும்!

பாப்பாப் பாட்டு

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!( பாரதி)

தமிழே அடையாளம் என்று--
நிமிர்ந்தே
தரணிக்குச் சொல்லடி பாப்பா!

பெற்றோர் நீகாணும் தெய்வம்--
என்றே
அற்புதமாய்க் கூறடி பாப்பா!

வெற்றியைக் கண்டேநீ என்றும்
மயங்கி
துள்ளாமல் வாழவேண்டும் பாப்பா!

தோல்வியைக் கண்டே துவண்டு--
சரிந்து
சோர்ந்து விடாதே பாப்பா!

வாய்மையை  நேர்மையை பின்பற்றி--
என்றும்
கொள்கையாய்க் கொள்ளவேண்டும் பாப்பா!

மனத்துக்கண் மாசின்றி நாளும்---
வாழ்வில்
உறவாட வேண்டுமடி பாப்பா!

கற்றுத் தெளிந்து கற்றதைநீ--
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டுமடி பாப்பா!

கற்றுத் தருகின்ற ஆசானை--
மறவாமல்
நினைத்தேதான் வாழவேண்டும் பாப்பா!

வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்தால்--
இல்லத்தில்
நிம்மதிக்குக் குறைவில்லை பாப்பா!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home