Monday, December 09, 2019

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

கலைஞர் உரை:

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாவா மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல

விருந்தோம்பல் பண்பு!

வாங்கவாங்க சாப்பிடுங்க என்றேதான் சொல்கின்றோம்,!
ஏங்க திடீர்னுவந்தேன்! எனச்சொல்லி
வந்தவர்கள்
காரணத்தைச் சொன்னாலும் வந்தோரை
உண்ணவைக்கும்
பேரன்பே அன்பு விருந்தோம்ப லாகுமிங்கே!
பாரா முகங்கொண்டால் வந்த விருந்தினரோ
ஏண்டாநாம் வந்தோம் எனநினைத்துச்
சென்றிடுவார்!
வந்தவரை உண்ணவைத்தல் பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home