தமிழியலன்-- கண்ணம்மா இணையருக்கு மணநாள் வாழ்த்து
தமிழியலன் கண்ணம்மா இணையரின்
இருபத்தியாறாம் திருமணநாள் வாழ்த்து
20.08.20
இல்லற முத்துக்கள்
பண்பரசன்-- தமிழ்முல்லை
இருபத்தி யாறாம் மணநாளைக் காணும்
அருந்தமிழ் வித்தகர் பண்பாளர் நண்பர்
பெருக்கெடுக்கும் பன்முக ஆற்றலின் ஏந்தல்
அருமைத் தமிழியலன் கண்ணம்மா நாளும்
பெருமையுடன் வாழ்க மகிழ்ந்து.
இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்!
உள்ளம் திளைக்கும் தமிழுணர்வே வாழ்வியலாய்
இல்லம் மணக்க தமிழ்முல்லை பண்பரசன்
பிள்ளைகளாய்ச் சூழ்ந்திருக்க பல்வளங்கள் பெற்றேதான்
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
நல்லதொரு நற்குடும்பம் பல்கலைக் கூடமென்பார்!
பல்கலைக் கூடமாக வாழும் தமிழியலன்
அய்யாவின் குடும்பம் செழிப்புடனே வாழியவே!
நல்லவர்கள் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home