பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து
பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து!
05.09.20
அணி்நடை எருமை!
எருமை இனத்தின் பெருமைகளைச் சொல்லி
அருமையாய்ச் சங்க இலக்கியச் சான்றை
வரலாறைக் கண்முன்னே கொண்டுவந்த ஆற்றல்
உரைதந்த பாலாவை வாழ்த்து.
மேக்கிறது எருமை; அதிலென்ன பெருமை!
------------------------------------------------------
அன்றாட வாழ்வில் எருமையென்னும் சொல்லை
எங்கெங்கே எப்படி ஆள்கின்றோம் என்பதை
நன்கு நகைச்சுவையாய்ச் சொன்னார் விறுவிறுப்பாய்!
சங்கச் சுரங்கத்தை வாழ்த்து.
எருமைப் பத்து!
ஐங்குறு நூறிலே ஓரம்போகி யார்பாடிய
பத்துப்பா தன்னில் எருமை வருவதால்
இப்பெயர் பெற்றதென்ற செய்தி இருப்பதை
நற்றமிழில் சொன்னார் மகிழ்ந்து.
தொல்காப் பியந்தொட்டு சங்க இலக்கியத்தில்
உள்ள பகுதிகளை நன்கு விளக்கினார்!
பத்துவகை கொண்ட எருமை இனந்தன்னைப்
பட்டியல் இட்டதைப் பார்.
மலைவாழும் தோடா பழங்குடிகள் வாழ்வில்
இணைந்த எருமை வழிபாட்டைச் சொன்னார்!
இடையற்ற பேச்சில் கருத்துகள் வந்தே
நடைபோட்ட ஆற்றலை வாழ்த்து.
கலித்தொகை பாவை அரங்கத்தில் ஏற்றி
விளக்கினார் செய்திகளை! கேள்விகளை வைத்தார்!
எருமையின் மீது எமனை அமர்த்தி
உருகொடுத்தோர் யாரென்றார்! இத்துடன் நேற்று
உரையை நிறைவுசெய்தார்! இங்கு.
உழவில் எருமை!
எருமையை வைத்தே உழவுசெய்த செய்தி
உலவுகின்ற நற்றிணைக் காட்சியைக் காட்டி
விளக்கிய உத்தி அருமை! புதுமை!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
டாக்டர் சங்கர சரவணன் உரை
பல்துறை வித்தகர் பாலா இலக்கியம்
சொல்கின்ற பார்வை தனித்துவம் கொண்டதென்றார்!
சங்ககாலம் ஏந்தும் சமூகச் செய்திகள்
என்றும் நிலைக்குமாறு ஆவண மாக்கவேண்டும்!
முன்வைத்த பாலாவை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
எருமையின் அருமையை
அறியா இருந்த
எம்மை செம்மையாய்
பாலாவின் சங்கச்
சுரங்கம் கொண்டுசென்று
குறைவில்லா தனிச்சிறப்பை
நிறைவாக எடுத்தியம்பி
கவிநடையில் எமக்களித்த
கவிவாணரை பாவாணரை
வெண்பாக் கவியை
வெண்சாமரம் கொண்டு
வீசி வாழ்த்துகிறேன்!
நன்றி நவில்கின்றேன்!
நன்றி! நன்றி அய்யா!
என்றும் நவின்றிடுவேன்!🙏🙏🙏
இமயவரம்பன்
0 Comments:
Post a Comment
<< Home