துணிந்து நில்
மானுடைய ஓட்டத்தின் வேகம் புலியினைக்
காட்டிலும் இங்கே அதிகமே! ஆனாலும்
மானுடைய அச்ச உணர்வே புலிகளுக்கு
மானோ இரையாக நேர்கிறது! நம்மைநாம்
வாழ்வில் குறைத்து மதிப்பிட்டால் தோல்வியே!
தாழ்வு மனப்போக்கை நீக்கு.
கொரோனாவின் தாக்கத்தின் வேகம்
நமது
நலம்பெறும் நோயெதிர்ப்பு ஆற்றல்முன் தோற்கும்!
நமது பயஉணர்வும் கோழை மனமும்
கொரோனாமுன் தோற்கிறது! உள்ளத் துணிவும்
தளராத நம்பிக்கை இந்த இரண்டும்
வளர்த்தால் வெற்றி நமக்கு.
மதுரை பாபாராஜ்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home