ஊரடங்கில் தளர்வு! எச்சரிக்கை!
தளர்வுகள் வந்ததென்று கண்டபடி போகும்
நிலையெடுத்தால் தொற்றுக்கே உள்ளாவோம்! மக்கள்
முகக்கவசம் போட்டு வெளியே செல்க!
இடைவெளி தன்னைக் கடைப்பிடிக்க வேண்டும்!
கைகளைச் சுத்தமாக வைப்பது நன்று!
அரசின் நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தால்
கொரோனா தவிர்க்கலாம் கூறு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home