நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
நண்பருக்கு வணக்கம்
மரங்கொத்தி-- மனங்கொத்தி
மரங்களைக் கொத்தித் துளையிட்டுப் பொந்தில்
வளர்ப்பாயாம் உன்குஞ்சை! மேலும் உணவாய்
மரப்பொந்தில் உள்ள புழுபூச்சி உண்பாய்!
மரங்களைக் கொத்தும் ஒலியால் இனத்தை
அழைத்தேதான் வாழ்வாய் மகிழ்ந்து.
இத்தகைய பண்புடைய நீயோ மரங்களைக்
கொத்திவாழும் வாழ்க்கை இயற்கை! மனங்களைக்
கொத்திக் குதறும் மனங்கொத்தி மாந்தர்கள்
வக்கிரம் கொண்டவர்கள் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home