தீபாவளி முறுக்கு
சுவைக்க முறுக்கு நல்லது!
வாழ்வில் முறுக்கு கெட்டது!
பச்சரிசி காயவைத்து மேலும் உளுந்தை இளஞ்சூட்டில்
பொன்போல் வறுத்துக் கலந்தே அரைத்துவை!
இந்தக் கலவை யுடனே பெருங்காயம் எள்ளுடன்
வெண்ணெயும் உப்பும் கலந்தே பிசையவும்!
நன்றாக காயவைத்த எண்ணெய் ஒருகரண்டி,
தண்ணீரையும் சேர்த்துப் பிசைந்தே உழக்கெடுத்து
நன்றாய்ப் பிழிந்தால் முறுக்கை நொறுக்கலாம்!
இன்சுவை முறுக்குகள் பார்.
முறுக்கை உரலிலே வைத்ததான் தட்டி
நொறுக்கிப் பொடியாக்கி வாயிலே போட்டு
மெதுவாய் அசைபோட்டே உண்பார் முதியோர்!
முறுக்கின் சுவையே தனி.
முறுக்காமல் வாழ்!
முறுக்கு பலகாரம் நல்லது! வாழ்வில்
முறுக்குடன் வாழ்ந்தால் மனதில் உளைச்சலே!
முறுக்கை விலக்கிப் பெருந்தன்மை கொண்டால்
சறுக்காது வாழ்க்கைதான் சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home