Wednesday, November 11, 2020

தீபாவளி ரிப்பன் பக்கோடா

 ரிப்பன் பக்கோடா!


அரிசிமாவும் பொட்டுக் கடலைமா சேர்த்து

அரைத்து மிளகாய்ப் பொடியுடன் பூண்டை

அரைத்தே இணைத்தேதான் வெண்ணெயும் உப்பும்

கலந்தேதான் தண்ணீரை விட்டுப் பிசைந்தே

உழக்கிலே அச்சுவைத்தே மாவைப் பிழிந்தால்

அழகான ரிப்பன்பக் கோடாதான் அங்கே

சுழன்று சுழன்று வரும்.


சுட்டதைத் தட்டில் அடுக்கியதும் கைகளோ

அப்படியே நீட்டி எடுத்தே கடிப்பதற்குப்

பற்றிப் பரபரக்கும்! ஆண்டுக் கொருமுறை

எட்டித்தான் பார்க்கும் இது.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home