Tuesday, February 02, 2021

123 பொழுதுகண்டு இரங்குதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

123 பொழுதுகண்டு இரங்குதல்

குறள் 1221:

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.


மாலையே! முன்புவரும்  அப்பொழுதா?

இல்லையில்லை!

வாடும் மகளிர் பிரிவுத் துயரத்தைக்

கூறுபோட்டுப் பார்க்கின்ற வாள்.

குறள் 1222:

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை.


மாலையே! என்போல் துயரப் படுகின்றாய்!

பாரிலே உன்னவரும் என்னவர்போல் 

கல்நெஞ்சம்

ஏந்தும் கொடியவரோ? சொல்.

குறள் 1223:

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்

துன்பம் வளர வரும்.


குளிர்நடுக்க வந்திருந்த  மாலை, வெறுக்கும்

அளவுக்குத்  துன்பம் தருகிறதே இன்று!

கலக்கம் பிரிவுத் துயர்.

குறள் 1224:

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்

தேதிலர் போல வரும்.


அன்பர் உடனிருந்தார்  வந்தமாலை தந்ததின்பம்!

இன்றோ உடனில்லை! மாலை கொலைக்களத்தில்

வன்பகை வாள்போ லாச்சு.

குறள் 1225:

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை.


காலைக்கு நான்செய்த நன்மையென்ன?

நானென்ன

மாலைக்கு தீமைசெய்தேன்? சாற்று.

குறள் 1226:

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.


அன்பர் பிரியாத போது மாலைப் பொழுதின்

வன்கொடுமை நானறியேன்  இங்கு.

குறள் 1227:

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய்.


காலை அரும்பிப் பகலில் முதிர்ந்தேதான்

மாலை மலருமிந்த நோய்.

குறள் 1228:

அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.


முன்பெல்லாம் ஆயன் குழலிசை இன்பந்தான்!

இப்போது துன்ப நெருப்பாக   கொல்கின்ற

வன்பகையாய்க் கேட்கிறது கேள்.

குறள் 1229:

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.


மாலை வரும்பொழுது என்னிலை நான்மயங்கி

நாளும் துன்பத்தில் நான்.

குறள் 1230:

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயுமென் மாயா உயிர்.


காதல் பிரிவையெண்ணி  மாயாத என்னுயிர்

மாலை மயங்குதே சாற்று.































0 Comments:

Post a Comment

<< Home