Wednesday, February 03, 2021

124 உறுப்புநலன் அழிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

124 உறுப்புநலன்  அழிதல்

குறள் 1231:

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.


பிரிவை நமக்களித்துத் தொலைதூரம்  சென்றார்! 

மலர்கள்முன் நாணின கண்.

குறள் 1232:

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.


பசலையில் பொங்குகின்ற கண்ணீரோ தன்னை

விரும்பிய காதலர் அன்புகாட்ட வில்லை

எனத்தான் உரைக்கிறதோ கூறு.

குறள் 1233:

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.


மணந்தபோது சேர்ந்திருந்தோம் பூரித்த தோள்கள்

பிரிவை உரைக்கும் மெலிந்து.

குறள் 1234:

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.


அவர்பிரிவால் தோள்கள் இளைத்தே வளையல்

கழல மெலிந்தன சாற்று.

குறள் 1235:

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.


அழகை இழந்தே வளையல் கழல

இளைத்துவிட்ட  தோள்கள் அவரின் கொடுமை

உரைக்கிறதோ ஊருக்கு? சொல்.

குறள் 1236:

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்

கொடியார் எனக்கூறல் நொந்து.


தோள்கள் மெலிந்தே வளையல் கழல்வதால்

ஊரவரைச் சாடுவதைக் கேட்டேதான்

நொந்தேன்!

யாரறிவார் என்னவரை  இங்கு?

குறள் 1237:

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.


நெஞ்சே! இரக்கமற்ற அன்பரிடம்

வாடுகின்ற

என்தோளின் வேதனையைச் சொல்லிப்

பெருமைகொள்ள

முன்வந்து செல்வாயா நீ?

குறள் 1238:

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.


தழுவிய கைகள் நெகிழ்ந்ததும் மங்கை

அழகிய நெற்றி பசந்ததே! ஏக்கப்

பிரிவின் கொடுமை அது.

குறள் 1239:

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.


தழுவல் இடைவெளியில் காற்று நுழைய

பிரிவினைத் தாளாமல் மாதரசி கண்கள்

பசலையை ஏந்தியது செப்பு.

குறள் 1240:

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.


பிரிவுத் துயராலே நெற்றிப் பசலை

தெரிந்ததும் கண்களும் துன்பம் அடைந்தே

துடித்தன அங்கேதான் சாற்று.


































0 Comments:

Post a Comment

<< Home