Thursday, March 04, 2021

முத்தொள்ளாயிரம் 16

 முத்தொள்ளாயிரம்

பாடல் 16

சேரன்/ கொல்லியர் கோன்/ சேரன்/ கோதை

வானிற்கு வையகம் போன்றது வானத்து

மீனிற் கனையார் மறமன்னர் – வானத்து

மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர்

கோன்சேரன் கோதையென் பான். – 16

------------------------------------------------------------------

கவிதை


வானம் உலகின் சிறப்பாகும்! விண்மீனோ

வானின் சிறப்பாகும்! விண்ணிற்கும்

வானிற்கும்

தேன்நிலா என்றும் சிறப்பாகும்! மக்களில்

ஈடற்றோன் மன்னனாம்! மன்னரில் ஈடற்றோன்

சேரனாம் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home