Tuesday, December 07, 2021

மதுரை நினைவுகள்


மதுரை நினைவுகள்

காமாட்சி பாவா பத்மா அக்கா இணையருக்கு மணப்பாறையில்  திருமணம்!


மதுரை நகரிருந்து எங்கள் குடும்பம்

மணப்பாறை ஊரிலே காமாட்சி பாவா

மணவிழா காண்பதற்கு வேனிலே சென்றோம்!

நினைவில் நிழலாடு தே.


மணப்பாறை ஊரில் வளர்ந்தவர் பத்மா!

மனமொன்றி காமாட்சி பாவாவை ஏற்றார்!

அனைவரும் சென்றோம் மகிழ்ந்தோம் 

திளைத்தோம்!

மனையறம் கண்டார் மகிழ்ந்து.


பென்னர் மதுரையில் வேலை! இணையராய்த்

தங்கள் குடும்பச் சிறகை விரித்திருந்தார்!

அன்பும் நகைச்சுவையும்  பண்பாக வாழ்ந்தனர்!

இன்றும் அவரெடுத்த நல்ல ஒளிப்படங்கள்

அங்கங்கே உள்ளன பார்.


தங்கள் கடமைகளைச் செய்தனர் வாழ்க்கையில்!

இந்த இணையர் பெயர்சொல்லும் பிள்ளைகள்

தங்கள் குடும்பத் துடனிங்கே வாழ்கின்றார்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


ஆசிகளை நாடும்

மதுரை பாபாராஜ்

வசந்தா 

குடும்பத்தார்





 

0 Comments:

Post a Comment

<< Home