நிம்மதி கானலா
...நிம்மதி கானலா?
எட்டுதிக்கும் நிம்மதியைத் தேடுகின்றேன் தேடுகின்றார்!
எந்தத் திக்கில் அதுவருமோ
ஏமாற்றிப் போய்விடுமோ?
இங்குவரும் அங்குவரும்
என்றேதான் ஓடுகிறேன்
இங்குமில்லை அங்குமில்லை சோர்ந்தேதான் வாடுகின்றார்!
தேள்போல கொட்டுகின்ற சூழ்நிலைகள் சூழ்ந்தேதான்
வேல்போலப் புண்படுத்திப்
பார்க்கிறதே! பார்க்கிறதே!
நாளெல்லாம் துன்பங்கள் நிலைதானா? வாழ்க்கையில்
நிம்மதியோ கானலான
நீர்தானா? சொல்லம்மா!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home