Monday, February 07, 2022

மீண்டு வரவேண்டும்

 கணவன் மீண்டு வரவேண்டும்!


பாதை தவறிக் கணவன் விலகியதால்

பாதிக்கப் பட்ட மனைவி கலங்குகிறாள்!

பேதையோ கோயில்கள் கோயிலாய் பூசைகள்

நாடுகிறாள் அந்தக் கணவன் வருவதற்கே!

தேடுகிறாள் காரணத்தை நாளும் தவிக்கின்றாள்!

கூடுவிட்டுக் கூடுமாறிப் போனவன் தன்சொந்தக்

கூடுநோக்கி மீண்டுவரத் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home