புயலுக்குள் நடக்கின்றேன்
புயலுக்குள் நடக்கின்றேன்!
நீ செய்த குற்றமா? நான்செய்த குற்றமா?
யார்செய்த குற்றமோ நானிங்கே பாதித்தேன்!
ஏனிந்த சோதனை? ஏனிந்த வேதனை?
யார்தந்த போதனை? புயலுக்குள் நடக்கின்றேன்!
சுமைதாங்கிக் கல்லாக சுமைகளைத் தாங்கிவந்தேன்!
சுமைகளை இறக்கிவிட்டே நிமிர்ந்தபோது அய்யகோ!
சுமையாக என்தலையில் பாறாங்கல் ஏற்றினார்!
தள்ளாடித் தள்ளாடி நான்நடந்தேன் சிரிக்கின்றார்!
ஒன்றிரண்டு பாறாங்கல் என்றாலும் சுமக்கலாம்!
எண்ணற்ற பாறாங்கல்! எப்படித்தான் நான்சுமக்க?
சுமைதாங்க முடியாமல் சாய்கின்றேன்!
சாய்ந்தாலும்
சுமையேற்றி மகிழ்கின்றார்! சுணங்கவேண்டாம் என்கின்றார்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home