Monday, September 09, 2024

நண்பர் சேது மாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


அறநெறி வாழ்வை அறிவுறுத்தும் வண்ணம்

குறள்களால் முப்பால் அளித்தே உயர்ந்த

திருவள் ளுவர்க்கோர் அருமைச் சிலையும்

மதவெறி இன்றி மதநெறிப் பேச்சால்

இதயம் கவர்ந்த விவேகாநந் தர்க்கும்

தவநெறி காக்கும் முறையில் சிலையும்

சிறப்பாக முக்கடல் சங்கமிக்கும் ஆழி

அலைவீச இங்கே நிறுவினார் வாழ்க!

கலைத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

🙏🏻அருமை

அருமை

ஆழி சூழ்

உலகம்

உம் கவியில்

மூழ்க..

நண்பர் முருகு மதுரை

[10/09, 09:54] Vovkaniankrishnan: நினைத்துவிட்டால் கவிதை

பார்த்துவிட்டால் கவிதை..என்று கவி வடிவாகவே வாழ்ந்துவரும் தங்களை நான் நட்பாகக்கொண்டுள்ளது பெருமையும் மகிழ்வும் தருகிறது.

[10/09, 10:01] Vovkaniankrishnan: அழகினை நேசிக்கத் தெரிந்த எனக்கு..அழகிய பாடலை வடிக்கத் தெரியாததுதான் ஏனோ?!!.

[10/09, 10:01] Madurai Babaraj: கவிதைக்கு மெருகூட்டும் கவித்துவம் உங்கள் படைப்பாற்றல்.

எனக்கு நண்பர் என்று சொல்வதில் எனக்குப்  பெருமை உண்டு.

[10/09, 10:01] Madurai Babaraj: நீங்களும் வடிக்கலாம். முயற்சி திருவினை ஆக்கும் ! ஆகும்.

நண்பர் ஜெயராமன் பென்னர் மதுரை:

உங்கள் சிந்தனை உயர்வானது ஆதலின் உணர்வாக உச்சிக்குச் சென்றது எந்த மரம் எந்நாளும் பசுமையாய் இல்லை எதார்த்தம் தான்

0 Comments:

Post a Comment

<< Home