எனக்கு மட்டும் ஏனிப்படி?
உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரும்
எப்படியோ வாழ்கின்றார்! ஆனாலும் என்வாழ்க்கை
இப்படி ஆனதே? ஏனென்று யார்சொல்வார்?
குற்றத்தை யார்செய்தார் கூறு?
குடும்பத்தைச் சீரழித்தே புன்னகைத்து வாழ்வோர்
நடுத்தெருவில் நின்றிடுவார்! காலம் உணர்த்தும்!
ஒருதப்பும் செய்யாத என்னைத்தான் நாளும்
துடிதுடிக்க வைப்பதேன் சொல்.?
எங்கோ இருக்கின்றாய் ஏதேதோ பேசுகின்றாய் !
உன்தாய் படுத்த படுக்கையிலே நொந்துபோய்
இங்கே துடிக்கின்றார்! நன்றி உணர்வின்றி
பண்பிழந்தே பேசுகின்றாய் ஏன்?
இங்கிருந்தே உன்கடமை செய்வதற்குச் சொல்கின்றேன்!
சொந்தபந்தம் எல்லாம் உதறிவிட்டே
வாழ்வது
கொஞ்சமும் ஏற்புடைத்த தல்ல! திருந்தினால்
நல்லது! இன்றிருக்கும் உன்வாழ்க்கை வாழ்க்கையல்ல!
முள்மண்டிக் கிடக்கின்ற காடு.
பேரப் பிள்ளைகள்
நிக்கில் ஆறாண்டும்
வருண் பத்தாண்டும் படிக்கவேண்டும்.
மருமகள் சத்யாவுக்கு உடல்நலம் சரியில்லை!
மகள் சுபாவுக்கு உடல்நலம் சரியில்லை!
எனக்குத் தள்ளாட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது!
அம்மா படுத்த படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கிறாள்!
இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருப்பது தப்பு.
உன்கடமைகளைச் செவ்வனே செய்யவேண்டும் இங்கிருந்து.
இரந்து கேட்கும் அப்பா
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home