இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்துபோகும்!
வெப்பமய மாகும் உலகப் பருவமாற்றம்
அப்படியே வானிலை மாற்றத்தைத் தந்தேதான்
எப்படி எப்படியோ தாறுமாறாய் மாமழையைக்
கொட்டித்தான் தீர்க்கிறது இங்கு.
அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் என்றே
இமைக்காமல் தன்னார்வத் தொண்டர்கள் எல்லாம்
ஒருங்கிணைந்தே தங்களால் ஆன முயற்சி
இரவுபகல் பார்க்காமல் செய்வதை வாழ்த்து!
வரவேற்போம் வாழ்த்துவோம் நாம்.
இயற்கை இயல்பையோ மாற்றல் அரிதே!
முயற்சிகளை மேற்கொண்டு மாமழை வெள்ளம்
வழிந்தோடச் செய்தல் கடமையாம்! வானம்
தெளிந்தால் வழிபிறக்கும் நம்பு.
மதுரை பாபாராஜ்
9003260981
0 Comments:
Post a Comment
<< Home