Wednesday, December 04, 2024

இன்றைய வாழ்க்கை முறை

 இன்றைய வாழ்க்கை முறை!


வீட்டுக்கு வீடு!


பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றார்!

பெற்றெடுத்த பிள்ளைகள் கல்விகற்கச் செல்கின்றார்!

எல்லோரும் வந்திடுவார் வீடுநோக்கி எப்படியும்!

பெற்றோர் வரும்வரை வீட்டில் தனிமையில்

எப்படியோ வாழ்வார்கள் பிள்ளைகள்! நேரத்தை

எப்படியோ போக்க தொலைக்காட்சி காட்டுவதை

அப்படியே பார்ப்பார்! மடிக்கணினி ஆடுவார்!

நாளும் சமையலர் செய்கின்ற சாப்பாடு!

ஆளற்றோர் கைபேசி எண்சுழற்றி சொல்லிடுவார்!

நேரந் தவறாமல் உண்பதற்கு வந்துவிடும்!

இப்படித்தான் வாழ்க்கை முறை.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home