Thursday, March 06, 2025

நாளும் துயர்!


நாளும் துயர்!


பெற்றோர் மகனைப் படிக்கவைத்தே முன்னேற்றிக்

கற்றோர் அவையில் நிமிர்ந்துநிற்கச் செய்திடுவார்!

அக்கறையாய்ப் பார்ப்பார் மகிழ்ந்து.


மகனிங்கே நன்றி மறந்தேதான் பெற்றோர்

அகம்நோக நொந்துபோகச் செய்திருப்பான் வாழ்வில்!

கடைசியில் பெற்றோர் முதுமையில் சாவார்!

கடைசிவரை நாளும் துயர்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home