Wednesday, March 25, 2026

பெரியாரைத் துணைக்கோடல் ---45

 -------------------------------------------------------------

பெரியாரைத் துணைக்கோடல் ---45

---------------------------------------------------------------

அறத்தை உணர்ந்து வாழ்கின்ற

சான்றோர் நட்பை அடைகின்ற

வழிகளை அறிந்து வாழவேண்டும்!

துன்பப் பிடியோ நெருங்காமல்

காக்கும் பெரியோரைத் துணைகொள்வோம்!

மூத்தோர் நட்பை உருவாக்கி

திளைப்பது நமது பேறாகும்!

அறிவிற் சிறந்த பெரியோரின்

உறவே உலகில் வலிமையாம்!

சான்றோர் உலகின் கண்ணாவார்!

சான்றோர் குழுவில் இருப்போர்க்கு

பகைமைத் துன்பம் ஏதுமில்லை!

தவறைச் சொல்லிக் கண்டிக்கும்

பெரியோர் துணையோ இருந்துவிட்டால்

அவரைக் கெடுக்க முடியாது!

தவறைக்  கண்டும் கண்டிக்கத் 

தயங்கும் பெரியோர் அமைந்துவிட்டால்

பகைவர் இன்றியே தான்கெடுவார்!

முதலே இல்லா வாணிகத்தில்

முனையின் அளவும் லாபமில்லை!

உரிய நேரத்தில் காக்கின்ற

பெரியோர் இன்றிப் பயனில்லை!


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home