குறுந்தொகை 4
குறுந்தொகை
பாடல் 4--
காமஞ்சேர் குளத்தார்
நோகும் நெஞ்சு
நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே!.
--------------------------------------------------------------
நானோ பிரியவேண்டும் தோழியே! சொல்வாயா?
மான்விழியாள் என்தலைவி தாங்கமாட்டாள்! என்றதும்
தேன்மொழி கொண்ட தலைவியோ தாங்குவேன்நான்!
தாங்கமாட்டார் என்தலைவர்! என்னிதயம் நோகிறதே!
மான்விழி கண்ணீர் சுட்டே இமைகளோ
தீய்ந்துவிடும்! என்கண்கள் தீய்ப்பதற்கே உள்ளன!
ஆனால் அருந்தலைவன் கண்கள் அதற்காகப்
பாங்காய் அமையவில்லை பார்.

0 Comments:
Post a Comment
<< Home