Thursday, March 26, 2026

குறிப்பறிதல்--71

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

குறிப்பறிதல்--71

----------------------------------------------------------------

அகக்குறிப்பை முகக்குறிப்பில் அறிதல்

----------------------------------------------------------------

மனதில் உள்ள எண்ணத்தை 

முகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள

ஆற்றல் கொண்டவன் உலகிற்கே

அணிகலன் போல ஆகிடுவான்!


இந்த ஆற்றல் படைத்தவனை

எந்தப் பொருளைக் கொடுத்தேனும்

துணையாய்க் கொள்தல் அறிவுடைமை!


மற்றவர் போல உறுப்புகளால்

ஒத்தி ருந்த போதிலுமே

அகத்தை உணரும் அறிவாலே

வேறு பட்டவர் ஆகின்றார்!


அகத்தின் குறிப்பை உணராதோர்

கண்கள் இரண்டால் என்னபயன்?

பொருளைக் காட்டும் பளிங்கைப்போல்

அகத்தைக் காட்டும் முகக்குறிப்பு!


விருப்பை வெறுப்பக் காட்டுகின்ற

முகத்திற் கிணையாய் வேறுண்டோ?

உள்ளக் குறிப்பை உணர்வோனோ

முகத்தில் அகத்தை உணர்ந்திடுவான்!


விழிகள் பொழியும் வேறுபாட்டால்

பொழிவது நட்பா? பகையா?

உரைப்போர் துணையே வல்லமையாம்!


பிறரின் கருத்தை ஆராய்ந்து

முகத்தைப் பார்த்தே உணர்த்துகின்ற

திறமைக் கிங்கே கண்கள்தான்

சிறந்து விளங்கும் அளவுகோலாம்!

0 Comments:

Post a Comment

<< Home