நூல்கள் வரிசை
மதுரை பாபாராஜ் நூல்கள் பெயர் வரிசைக் கவிதை!
*கவிச்சாரல்*
தந்த
*கவியமுதம்* இந்தப்
புவியில்
*மகரவிளக்கை* ஏற்று
*மரபுகளின் அருவி*
*மகிழம்பூ* ஏந்தும் மணத்தில் கடலில்
*கிளிஞ்சல்கள்* பார்த்தேன்!
*மகரயாழ்* மீட்டும்
தெளிவிலே
*அற்புதத்தரு* தந்தேன். *திருக்குறள்பேழை*
யைச் செய்தேன்!
*அறம்பொருள் இன்பமென்னும்*
முப்பாலை *வெண்பா*
முறையில் கவிதைவடித்தேன்! *வசந்தம்*
கடைவிரிக்க
*பூச்சரம் தேனருவி*
கண்டேன்!
நடைமுறை
*வாழ்வியல்அந்தாதி*
கம்பன்
படையின்
*ராமாயணத்தைப்*
பாவால் படைத்தேன்,!
*அறத்துப்பால், இன்பத்தை ஆங்கிலத்தில்* தந்தேன்!
*அறம்பொருள் தந்தேன் குழந்தைப் பாடல்*!
*இன்பத்துப் பாலைப் புதுக்கவிதை* தந்தேன்!
*குறள்வெண்பா ராமா யணத்தைப்* படைத்தேன்!
*அகர வரிசை மனக்குறள்* தந்தேன்!
மகத்தான *ஔவையார்*
*பாரதி ஆத்திசூடி* படைத்தேன்!
குறளின் *பொருட்பால் ஆங்கிலம்* தந்தேன்!
*குழந்தைகளுக்கு குறளமுதம்* *நாலடியார்* *Reverberation* ஆங்கிலத்தில் தந்தேன்!
எனஆகா! *இனியவை நாற்பதை* நூல்வடிவில் தந்தேன்!
*குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்* 1330 குறள்களுக்கும் நூல்வடிவில் தந்தேன்!
*புதுவசந்தம்* தலைப்பில் மனைவியின் கவிதைத் தொகுப்பு
தந்தேன்!
அகத்தின் நிறைவே பா.
அகங்குளிர நூல்களைத் தந்தேன்நான்! ஆகா
பிறவியில் நான்பெற்ற பேறு.
வெளிச்சம் தொலைக்காட்சியில் அறத்துப்பால் விளக்கம்!
வெளிச்சம் தொலைக்காட்சி வாய்ப்பாக என்னை
வெளிச்சத்தில் வள்ளுவன் வாக்கில் அறத்தை
விளக்கி குறள்கள், பொருள்கள், நிகழ்வு,
விளக்கத்தை ஆங்கிலத்தில் என்றே கொடுத்தேன்!
பனையூரார் பாபு அவர்களின் ஊக்கம்
முரளிக் குழுவினர் ஒத்துழைப்பும் என்னை
முரளிக்கு அறிமுகம் செய்த குடும்ப
உறவாம் சிவகாமி சீனிவாச னும்தான்
நிகழ்ச்சியின் வெற்றிக்கு வேர்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home