Sunday, March 29, 2026

தமிழ்நாடு

 தமிழ்நாடு

இணக்கம் எங்கள் இயல்பு!

தமிழ்நா டென்றே சொல்லு!

தலைநிமிர்ந் தேதான் நில்லு!

அனைவரும் இங்கே ஒன்று

பிணக்குகள் ஏதும் இல்லை!

ஆத்திகம் நாத்திகம் உண்டு!

வீடுகள் தோறும் தழைக்கும்!

அனைத்து மதங்களும் உண்டு!

வேற்றுமை என்பதே இல்லை!

இணக்கம் ஒன்றே மூச்சு!

இயல்பாய் வாழ்வோம் நாங்கள்!

பிரித்து வாழும் சூழ்ச்சிக்

கிடந்தர மாட்டோம் நாங்கள்!

தமிழே எங்கள் மொழியாம்!

தமிழே எங்கள் விழியாம்!

மண்ணின் பெருமை இணக்கம்!

மக்களின் பெருமை இணக்கம்!

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home