Wednesday, March 25, 2026

சிற்றினம் சேராமை--46

 --------------------------------------------------------

சிற்றினம் சேராமை--46

--------------------------------------------------------------

சிற்றினம் கண்டே ஒதுங்கிடுவார்

பெருமை கொண்ட பெரியோர்கள்!

சிற்றின நட்பில் திளைப்பவர்கள்

அற்பக் குணமுள்ள இழிகுலத்தார்!

நிலத்தின் இயல்பையே நீரேற்கும்!

தீயோர் குணத்தையே அறிவேற்கும்!

மனதின் இயல்பு அறிவாலே!

குணத்தின் இயல்பு இனத்தாலே!

மனதின் அறிவாய்த் தோன்றினாலும்

இனத்தில் இருந்தே தோன்றியதாம்!

தூய மனத்தோர் செய்கின்ற

செயல்கள் எல்லாம் நன்மைதான்!

தூய இனமாய் இருந்துவிட்டால்

தீய செயல்கள் தோன்றாது!

மனதின் நன்மை ஆக்கத்தை

உயிர்களுக் கெல்லாம் கொடுத்துதவும்!

இனத்தின் நன்மை புகழ்தருமே!

இயல்பாய் மனநலம் கொண்டவர்க்கு

சான்றோர் உறவு காப்பாகும்!

மனதின் நலத்தால் மறுபிறவி

இன்பம் கிடைக்கும் ஒருவருக்கு!

இனத்தின் நலத்தால் அவ்வின்பம்

மேலும் வலிமை பெற்றுவிடும்!

நல்ல இனமே பெருந்துணையாம்!

தீய இனமோ பெருந்துயராம்!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home