Sunday, June 13, 2010

நோயின் வலிமை

====================
அச்சமென்றால் என்னவென்று கேட்கும் மனிதனும்
உச்சகட்ட நோயால் உடலில் வலியெடுத்தால்
கத்திக் கதறிடுவான்! அஞ்சி நடுங்கிடுவான்!
இத்தரணி நீதி உணர்.

எப்படிச் சீறிச் சினந்தவனும் நோய்வந்தால்
பெட்டிக்குள் பாம்பாய்ச் சுருண்டு படுத்திடுவான்!
நெற்றியடி வாங்கி அசையாமல் வீழ்ந்திருப்பான்!
தத்தியே தத்தளிப்பான் சாற்று.

மதுரை பாபாராஜ்

2 Comments:

Blogger கை.க.சோழன் said...

sariyaaka soneer.

1:52 AM

 
Blogger cheena (சீனா) said...

அன்பின் பாபாராஜ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன். நல்ல சிந்தனிஅயில் உதித்து நற்கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

8:24 PM

 

Post a Comment

<< Home