அன்புமகனுக்குப் பிறந்தநாள்
வாழ்த்துப்பா!
அகவை: இனியவை நாற்பது
40
15.03.18
மகன்: மருமகள்:
எழிலரசன்-- சத்தியபாமா
பேரன்கள்:
நிக்கில் அபிசேக்
வருண்ஆதித்யா
ஊற்றெடுக்கும் சாதனைகள் உன்பெயரை வாழ்த்திசைக்க
நாற்பதைத் தொட்டுத் தொடர்கின்ற வாழ்விலே
ஏற்றங்கள் என்றும் துணைநிற்க வாழியவே!
மாற்றங்கள் காண்பாய் மகிழ்ந்து.
மனைமாட்சி மங்கலம் தங்கித் தழைக்க
மனைவி, மகன்களின் அன்பில் உறவில்
தினமும் திளைத்தேதான் வாழ்கபல் லாண்டு!
மனதார வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.
இனியவை நாற்பதில் இன்பமுடன்
வாழ்க!
துணிச்சல் உழைப்பு முயற்சியுடன் வாழ்க!
கணினி நிறுவனம் தழைத்தோங்கி வாழ்க!
மனிதம் தழைக்க குறள்நெறியில்
வாழ்க!
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.!
மதுரை பாபாராஜ்
வசந்தா
உடன்வாழ்த்தும் இதயங்கள்
ரவி-- சுபா தேவி -- சுசாந்த் ஸ்ரீராம்
0 Comments:
Post a Comment
<< Home