Thursday, July 16, 2020

படியேறு இலக்குநோக்கி!

படிப்படியாய் ஏறுகின்ற நேரத்தில் நாமோ
படிகளைப் பார்தேதான் ஏறவேண்டும்!  கொஞ்சம்
படிஇடறி விட்டால் தடுமாறி நிற்போம்!
அடுத்த படியேறும் போது கடந்த
படிபார்த்தால் தட்டுத் தடுமாறி வீழ்வோம்!
படியேற தத்தளிப்போம்! நம்மிலக்கு மேலே
படிபார்த்துச் செல்வது தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home