Wednesday, October 21, 2020

இன்பத்துப்பால் அதிகாரங்கள்

 இன்பத்துப்பால் அதிகாரங்கள்!


109 -- 133


*தகையணங்கு றுத்தலோ* பெண்ணழகைச் சொல்லும்!

அகக்குறிப்பைத் தானே *குறிப்பறிதல்* கூறும்!

*புணர்ச்சி மகிழ்தல்* *நலம்புனைந்து சொல்தல்*

மனக் *காதல்* கொண்ட *சிறப்புரைத்தல்*  ஆகும்!

மடலேறல் *நாணுத் துறவுரைத்தல்!* காதல்

உறவு வெளிப்பட்டு சாடையாய்ப் பேசல்!

*அலராய் அறிவுறுத்தல்!* ஏக்கம் பொழியும்

*பிரிவாற்றா மைதந்தார்!* துன்பம் உருக்கப்

*படர்மெலிந் திரங்கலுடன்* கண்கள் கலங்க

*சுடர்க்கண் விதுப்பழிதல்!* மேனி முழுதும்

*பசப்புறு காணும் பருவரல்* மற்றும்

படரும் *தனிப்படர் துன்பம் மிகுதி!*

அகத்தின் தலைவர் பிரிந்ததால்  துன்பம்

மிகவே *நினைத்துப் புலம்பல்!*  *கனவு

நிலையுரைத்தல்!* மாலைநே ரம்கண்டு துன்பம்

வருத்தும் *பொழுதுகண்டே நாளும் இரங்கல்!*

பிரிவால் *உறுப்புநலன் சீரழிதல்!* நெஞ்சம்

உருக *நெஞ்சொடு ஒன்றாக கிளத்தல்!*

*நிறை அழிதல்!* *அவர்வயின்வி தும்பல்!*

*குறிப்பு அறிவுறுத்தல்* மற்றும் *புணர்ச்சி

விதும்பல்*  *நெஞ்சொடு நின்று புலத்தல்!*

உறுத்துகின்ற ஊடலைக் காட்டும் *புலவி!*

*புலவி நுணுக்கம்* அடுத்தது *ஊடல்

உவகை* யுடனிங்கே இன்பத்துப் பாலின்

அதிகாரம் எல்லாம் நிறைவு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home