Tuesday, October 20, 2020

அமுதா ரகு வீட்டுக் கொலு

 அமுதா ரகு நான்சி வீட்டுக் கொலு!

காரைக்குடி!


வண்ண வண்ண பொம்மைகள்

வகை வகை யான பொம்மைகள்


படிப்படி யாக வைத்தேதான்

அடுக்கிய பொம்மைகள் அழகுதான்


புராணக் கதைகள் கூறும்பொம்மை

அங்கங்கே தான் இருக்கிறது


வள்ளுவர் காந்தி தலைவர்கள்

கம்பீர மாக இங்குண்டு


அமுதா கைவண் ணத்தாலே

கலைநயம் மிளிர செய்திருக்கும்


அம்மன் பொம்மை அற்புதந்தான்

அனைவரும் வணங்கி மகிழ்கின்றார்.


நித்தம் சுண்டல் வகையறாக்கள்

தந்தே விருந்து படைக்கின்றார்.


அழகிய கொலுவோ அற்புதந்தான்

வழங்கிடும் பக்தி பரவசந்தான்


அமுதா ரகுவும் நான்சியுடன்

அருமைக் கொலுதான் வைத்தாரே!


மதுரை பாபாராஜ்

வசந்தா

20.10.20





0 Comments:

Post a Comment

<< Home