ஒற்றுமையே வலிமை
ஒற்றுமையே வலிமை!
பல்போனால் சொல்போச்சு!
( கவிதக்கு கருத்து: நண்பர் ராஜூ)
முப்பத் திரண்டுடன் வாழ்ந்திருந்த நேரத்தில்
பற்களின் உண்மை வலுதெரி யாமலே
எப்போதும் வாழ்ந்திருந்தோம் ஒவ்வொன்றாய்ச் சாய்ந்தபோது
அக்கறையாய் பல்சிகிச்சை செய்தே நிமிரவைக்க
ஒட்டவைக்கப் பார்க்கிறோம்!
பல்லை மருத்துவர்
கட்டி வலுகொடுக்கப் பார்க்கிறார் எப்படியோ!
பற்களின் சீரமைப்பு நாளும் தொடர்கதைதான்!
ஒற்றுமையே என்றும் வலிமை! சீர்குலைந்தே
பல்போனால் சொல்போச்சு போ.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home