Friday, December 18, 2020

28 கூடாஒழுக்கம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


28 கூடா ஒழுக்கம்

குறள் 271:

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சக எண்ணங்கள் கொண்டோர் ஒழுக்கத்தை

ஐம்பூதம் நம்முள் நகும்.

குறள் 272:

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்

தானறி குற்றப் படின்.

தான்செய்தல் குற்றம் எனத்தெரிந்தும் செய்பவர்கள்

பூண்டுள்ள வேடம் துறவு.

குறள் 273:

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

இழிந்தோர்கள் நல்லவர்போல் வாழ்தல், பசு

புலித்தோ லணிந்துமேய்தல் போல்.

குறள் 274:

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

துறவி ஒழுக்கமின்றி வாழ்வது, 

வேடன்

மறைந்திருந்துப் புள்பிடித்தல் போல்.

குறள் 275:

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்

றேதம் பலவுந் தரும்.

பற்றில்லை என்றேதான் பொய்சொல்லி 

வாழ்வோரைச்

சுற்றும் துயரங்கள் சூழ்ந்து.

குறள் 276:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில்.

வஞ்சகரும், பற்றை விடாமல் துறவியைப்போல்

இங்கே நடிப்பவரும் ஒன்று.

குறள் 277:

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து.

புறத்திலே குன்றிமணி செம்மை!

அகத்தில் 

கறைபோல் கருமைகொண்டோர் உண்டு.

குறள் 278:

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

மனமெல்லாம் மாசு! புறத்தோற்றம்

தூய்மை!

தினவெடுத்தோர் இவ்வுலகில் உண்டு.

குறள் 279:

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை

வினைபடு பாலாற் கொளல்.

கணையோ அழகெனினும்  துன்பந்தான்! யாழோ

மனங்கவரும் தோற்றமில்லை! மீட்டினால்

இன்பம்! 

வினையால் கணித்தலே நன்று.

குறள் 280:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்.

பழிச்செயலை விட்டால் முடிவளர்த்தல் மற்றும்

மழித்தலெல்லாம் வேண்டாம் உணர்.


மதுரை பாபாராஜ்































0 Comments:

Post a Comment

<< Home