Friday, December 18, 2020

அடுக்ககத்தில் புறாக்கள்

 அடுக்ககத்தில் புறாக்களும் மக்களும்!


STRUGGLE FOR EXISTENCE!

புறாக்கள் வரவைத் தவிர்க்க வலையால்

தடுத்திருந்தோம்! ஆனால் புறாக்களோ கொத்தித்

தடையுடைத்தே இங்கே நுழைந்தன! ஆற்றல்

கலையறிந்தே பார்த்து மகிழ்ந்தேன்! என்ன

வலைபோட்டும் எங்கே பயன்?


பறவைகள் வாழ்ந்த இடத்திலே மக்கள்

அடுக்ககம் கட்டிக் குடிபுகுந்தால் அந்தப்

பறவைகள் எங்கே குடிபெயரும்? நாளும்

பறவைக்கும் மாந்தருக்கும் போராட்ட வாழ்க்கை!

இடஉரிமை யாருக்கு? சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home