மயங்கினேன்
மயங்கினேன்!
உளைச்சலுக்கே ஆளாகிப் போனேன்!
உள்ளீடற்ற கூடாகிப் போனேன்!
அலைச்சலே வாழ்வாக களைத்தேதான் போனேன்!
இலைச்சருகாய் மண்ணெல்லாம் புரண்டேதான் பேனேன்!
அலைக்கரங்கள் விளையாடும் பந்தாகிப் போனேன்!
சிதைந்தேதான் போன சிலையாகிப் போனேன்!
நடைபோட்ட பாதையெல்லாம் தடைக்கற்கள் கண்டேன்!
தடைக்கற்கள் தட்டிவிட எப்படியோ வீழ்ந்தேன்!
உடைப்பெடுத்த வானத்தில் மழைப்பொழிவில் மயங்கினேன்!
மடைதிறந்த வெள்ளத்தில் சருகாகிப் போனேன்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home