கலையும் காகங்கள்!
கலையும் காகங்கள்!
எந்த வழியே உயிர்க்காற்று வந்தது?
யாருக்கும் தெரியாது!
எந்த வழியே உயிர்க்காற்று செல்லும்?
யாருக்கும் தெரியாது!
வந்த வழியேதான் செல்லுமோ?
யாருக்கும் தெரியாது!
சொந்த வழியில் தான் போகுமோ?
யாருக்கும் தெரியாது!
என்றுவரை நின்றுலவும் இக்காற்று?
யாருக்கும் தெரியாது!
ஓட்டைக்குள் கசியாமல் வாழ்கிறதோ?
யாருக்கும் தெரியாது!
ஒருநாள் சென்றுவிடும் கூட்டைவிட்டு?
கூடுமிஞ்சும் காற்று எங்கே?
அனைவரும் பார்த்திருக்க கூடி உரையாட
காற்றுமட்டும் சென்ற இடமெங்கே? சொல்வாயா!
சென்றபின்பு மீளாத் துயில்கொண்டார்!
ஒருபிடிச் சாம்பலானார்!
உருவமெங்கே? மீண்டு வருவாரோ?
காண்பதென்று? சந்திப்போமா?
போனவர் போனதுதான்! மாண்டவர் மாண்டதுதான்!
நேற்றிருந்தார் இன்றில்லை! வாழ்வின் இலக்கணம்!
நிலையாமை ஒன்றே நிலையானது!
கலையும் காகங்கள் மனித இனங்கள்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home