Saturday, September 11, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

பறவையே இன்றைய கவிதையைக் கேள்!

இப்படியும் ஆள முடியுமா?


இப்படியும் ஆள முடியுமா? என்றெண்ணும்

முத்தான ஆட்சியை நாளும் தருகின்றார்

முத்துவேலர் மைந்தன் கலைஞரின் ஸ்டாலின்தான்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாக்களித்தோர் வாக்கைத் தவிர்த்தோர் பிரிக்காமல் 

ஆக்கபூர்வ நேர்மறைச் சிந்தனையைச் சாதனையாய்ப்

போற்றும் நிலையெடுத்தே ஆட்சி நடத்துகின்றார்!

ஆற்றலுடன் வாழ்கபல் லாண்டு.


நாள்தோறும் மக்கள் மகிழ அறிவிப்பும்

வாக்கை நிறைவேற்ற செய்யும் செயல்திறனும்

ஆக்கபூர்வ மான குழுஉணர்வும் வெற்றிகளைக்

காக்கும் இமையான திங்கு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home