Thursday, September 09, 2021

முதல்வருக்கு வாழ்த்து!


முதல்வருக்கு வாழ்த்து!


அங்காடி ஊழியர்கள் நின்று பணிபுரியும்

வெங்கொடுமை நீங்க அமர்வதற்கு ஏற்பவே

தந்திட வேண்டும் இருக்கை வசதிகள்!

அக்கறை கொண்ட அரசுக்கு நன்றிசொல்வோம்!

மக்கள் முதல்வராம் ஸ்டாலினை வாழ்த்துவோம்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


பலவகை நோய்களை அண்டாமல்  செய்து

நலம்பேணும் நல்லரசாய் நம்மரசாய் இங்கே

வலம்வரும் காட்சி தெரிகிறது! வாழ்த்துவோம்!

உளங்கனிந்த தாயுள்ளம் வாழ்த்து.



மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home