Wednesday, September 08, 2021

திரு.மாரியப்பன் தங்கவேலு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்!


திரு.மாரியப்பன் தங்கவேலு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்!


மாற்றுத் திறனாளி மாரியப்பன் தங்கவேலு

ஆற்றலால் சாதித்தார் வெள்ளிப் பதக்கத்தை!

ஊற்றெடுக்கும் ஆற்றலால் தங்கத்தை வென்றெடுக்க

போற்றுவோம் வாழ்த்துவோம் சூழ்ந்து.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

மாரியப்பன் தங்கவேலு தாயுள்ளம்

இன்றிங்கே

சேயாற்றல் கண்டே மகிழ்ந்து திளைத்தது!

தாய்தந்த ஊக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home