Monday, September 06, 2021

காமா அம்மையார்!


நூல் பெண்ணே பேராற்றல்!



1. காமா அம்மையார்!


இல்லறப் பற்றா? விடுதலை வேள்வியா?

துல்லியமாய் ஏற்றார் விடுதலை வேள்வியை!

சொல்லொணாத் துன்பத்திற் காளாகி

வாழ்ந்தவர்!

வல்லவர் காமாவை வாழ்த்து.


சிகிச்சைக்குச் சென்றார் வெளிநாடு! அங்கே

தகித்தது விடுதலை வேள்வித் தணல்தான்!

வெறிபிடித்த ஆங்கிலேயர் ஆணை மறுத்தார்!

இடங்கொடுத்த நாடாம் பிரான்சுக்குச் சென்றார்!

தடம்பதித்தார் இந்தியப் போராளி சூழ!

நடைபோட்டார் காமா நிமிர்ந்து.


இந்திய நாட்டிற்கு மூவண்ணம் ஏந்துகின்ற

இந்திய நாட்டுக் கொடியை உருவாக்கி

ஜெர்மனியில்

இந்திய தேசக் கொடிதன்னை ஏற்றினார்!

தன்னுடைய வாழ்வின் இறுதியாக இந்தியாவில்

கண்மூடினார்! வரலாறை வாழ்த்து.


பூனா நகரில் மராத்தா நூலகத்தில்

காமா வடிவமைத்த நாட்டுக் கொடியோ

பார்வைக்கு இன்றும் இருக்கிறது! பார்க்கலாம்!

சோசலிசக் கொள்கைப் போராளி மங்கையாம்

காமாவை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home