போகேஸ்வரி புகநாநி
பெண்ணே பேராற்றல்
4. போகேஸ்வரி புகநாநி
அசாமில் பிறந்தவர் இல்லறத்தை ஏற்றார்!
அறவழிப் போரராட்டம் பங்கேற்று வாழ்ந்தார்!
அடக்குமுறை ஏவியே ஆங்கிலேயர் காங்ரஸ்
அலுவலகம் தாழிட்டுப் பூட்டினர்! திறக்க
இவரும் பொதுமக்கள் எல்லாம் திரண்டே
கொடிபிடித்துச் சென்றனர் சூழ்ந்து.
திறந்தனர் ஆனால் அடக்குமுறை ஏவி
படைதிரண்டு வந்தார் அரசுப் படைதான்!
கொடியேந்தி வீர முழக்கமிட்டே வந்தார்!
கொடியைப் பறித்து அவமதித்தார் அங்கே
தடிகொண்டு ஆங்கிலேயர்! மங்கை வெகுண்டே
கொடிக்கம்பால் ஆங்கிலேய நீசனைத் தாக்க
மதியிழந்தே மாதரசி போகேஸ்வரி யையோ
துடிதுடிக்கச் சுட்டேதான் கொன்றனர்
பார்த்து!
உதிர்ந்தார் தியாக மலர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home