Monday, October 18, 2021

புறநானூறு பாடலுக்குக் கவிதை!


புறநானூறு பாடலுக்குக் கவிதை!


"படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்       

மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்   

பயக்குற இல்லை தாம் வாழும் நாளே.."               புறநானூறு - 188


என் கவிதை:

எத்தகைய செல்வந்தர் ஆனாலும் மாவிருந்தை

சுற்றமுடன் கூடியே உண்டாலும் உண்ணுகின்ற

அப்பொழுதில் தேன்மழலை சின்ன நடைநடந்து

உண்ணும் உணவிலேகைவைத்துப்

பெற்றோரைத்

தொட்டுத் துழாவியே நெய்மணக்கும் சோற்றினைப்

பட்டுபோன்ற தன்னுடல் மற்றுமிங்கே பெற்றோரின்

கட்டுடலில் வாரி இறைத்து மயக்குகின்ற

சிட்டுக் குழந்தை அமுதநிகர்ச் செல்வம்முன்

எச்செல்வம் நிகராகும் சொல்?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home