திருப்திகொள்
இருப்பதில் திருப்திகொள்!
கடற்கரை மண்ணில் புரண்டாலும் உந்தன்
உடலிலே ஒட்டுவது மட்டுமே ஒட்டும்!
கடையையே வாங்கினாலும் தங்குவது
மட்டும்
உடைமையாய்த் தங்கும் உணர்.
உனக்கு வரவேண்டும் என்றிருந்தால் இங்கே
உனக்கென்று வந்துசேரும் எப்படியும் தேடி!
உனக்கில்லை என்றாலோ என்றும் வராது!
மனக்குமுறல் என்றும் தவிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home