நண்பர் G.ஜெயபிரகாசன் அவர்களுக்கு வாழ்த்து!
நண்பர் G.ஜெயபிரகாசன் அவர்களுக்கு வாழ்த்து!
05.01.22
மேலூர் வழக்கறிஞர் சங்கத்தின் பண்பட்ட
மூத்தநிர் வாகக் குழுவில் பணியாற்ற
தேர்ந்தெடுத்த வாய்ப்பினை வாழ்த்தி
மகிழ்கிறேன்!
ஆர்வமுடன் தொண்டாற்ற வாழ்த்து.
அழகப்பா கல்லூரி வாழ்விலே நட்பு
மலர்ந்து மணம்பரப்பி இன்றளவும் நாங்கள்
உளங்கனிய பேசி மகிழ்கின்றோம்! இந்தப்
பிறவியின் பேறென்பேன் நான்.
நட்பில் நளினம்! பழகுவதில் தென்றல்தான்!
எத்துறை என்றாலும் ஆர்வமுடன் கற்றறிந்து
அத்துறையில் நாளும் வளர்கின்ற பண்பாளர்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home