தெய்வத்திரு ஓட்டுநர் சுப்ரமணியன்
அரசாயி பாட்டி மருமகனை நினைத்துப் பேசியது!
நின்ற இடம் யாவும் நிழல்போல தோன்றுதே!
இறந்தவர்! இல்லற வாழ்வின் தளமாம்!
இறந்தவரை எண்ணிக் குமுறுகின்ற வாழ்க்கை!
இருக்கும் வரைக்கும் கலகலப்பாய்ப் பேசி
சிரித்திருந்த கோலத்தை எண்ணிப் புலம்பும்
நிலையையார் தந்தாரோ என்றேதான் ஏங்கும்
குடும்பத்தார்க் காறுதல் யார்?
கூடுகின்றார் பேசுகின்றார் ஆறுதல் சொற்களைத்தான்!
கூடுவோர் சென்றதும் மீண்டும் தனிமைதான்!
பாழும் மனமோ உறவாடி வாழ்ந்ததை
காட்சியாக கண்களின் முன்னே நிழலாட
தோன்றவைத்துப் பார்ப்பதேன் கூறு?
வாழ்ந்து மறைந்து பிரிந்தோர் பொருள்களைக்
காணும் பொழுதில் கலங்கிடுதே என்னுள்ளம்?
ஏனோ நிலையாமை என்றறிந்தும் உள்ளமோ
சோகத்தில் கொந்தளிப்ப தேன்?
குறித்தநேரம்! புன்சிரிப்பு! உள்ளங் கவரும்
மடிப்புக் கலையாத ஆடை , கடமை
நெறியுடன் ஏற்ற பொறுப்புணர்வு கொண்டு
நிதானமாய் வண்டியை ஓட்டும் அழகு!
இவைகளே சுப்ர மணியன் பெயரின்
உருவமாகும் என்பேன் மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home